Advertisement

சச்சின் டெண்டுல்கரின் வாழ்நாள் சாதனையை முறியடித்து விராட் கோலி உலகசாதனை!

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 50 சதங்களை விளாசிய வீரர் எனும் வரலாற்று சாதனையை இந்திய வீரர் விராட் கோலி படைத்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan November 15, 2023 • 18:38 PM
சச்சின் டெண்டுல்கரின் வாழ்நாள் சாதனையை முறியடித்து விராட் கோலி உலகசாதனை!
சச்சின் டெண்டுல்கரின் வாழ்நாள் சாதனையை முறியடித்து விராட் கோலி உலகசாதனை! (Image Source: Google)
Advertisement

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று மும்பையில் நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா அதிரடியான ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தார்.

குறிப்பாக 4 பவுண்டரி 4 சிக்சருடன் அதிரடியாக 47 ரன்கள் குவித்து அவுட்டான அவருக்கு பின் வந்த விராட் கோலி கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபுறம் தம்முடைய பங்கிற்கு மிகச் சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் அரை சதம் கடந்து 8 பவுண்டரி 3 சிக்சருடன் 79 ரன்கள் அடித்திருந்த நிலையில் மும்பை நிலவிய அதிகப்படியான வெப்பத்தை தாங்க முடியாமல் தசைபிடிப்பு காரணமாக பாதியிலேயே பெவிலியன் திரும்பினார்.

Trending


அந்த நிலைமையில் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாட நிலையில் மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய விராட் கோலியும் அரை சதம் கடந்து நியூசிலாந்து பவுலர்களுக்கு சவாலை கொடுத்தார். நேரம் செல்ல செல்ல நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் தம்முடைய 50ஆவது சதத்தை அடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் வாழ்நாள் உலக சாதனையை உடைத்தார்.

இதற்கு முன் சச்சின் 452 இன்னிங்ஸில் 49 சதங்கள் அடித்திருந்த நிலையில் விராட் கோலி 259 இன்னிங்சிலேயே 50 ஓவர் கிரிக்கெட்டில் 50 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற மாபெரும் உலக சாதனை படைத்தார். அதுமட்டுமல்லாமல் இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 700* ரன்கள் குவித்துள்ள அவர் உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் மற்றுமொரு வாழ்நாள் சாதனையை உடைத்தார்.

இதற்கு முன் 2003 உலகக்கோப்பையில் 673 ரன்கள் அடித்து சச்சின் படைத்த சாதனையை 2019இல் ரோஹித், வார்னர் போன்றவர்கள் நெருங்கியும் தொட முடியவில்லை. இருப்பினும் தற்போது அதையும் உடைத்துள்ள விராட் கோலி ஒரு உலகக் கோப்பையில் அதிக முறை 50க்கும் மேற்பட்ட ரன்கள் விளாசிய வீரர் என்ற உலக சாதனையும் படைத்துள்ளார். இதற்கு முன் சச்சின் (2003) மற்றும் ஷாகிப் அல் ஹசன் (2019) தலா 7 முறை 50+ ரன்கள் அடித்திருந்ததே முந்தைய சாதனையாகும்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

மேலும் உலக கோப்பையில் ஒரு தொடரில் 700 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையும் படைத்த அவர் தலைவணங்கிய போது பெவிலியனிலிருந்து சச்சின் கைதட்டி பாராட்டினார். இறுதியில் 9 பவுண்டர் 2 சிக்சருடன் 117 ரன்கள் விளாசிய விராட் கோலி இந்தியா 300 ரன்கள் தாண்டுவதற்கு உதவி ஆட்டமிழந்தார். இந்நிலையில் இக்காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.  


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement