விராட் கோலி சதமடித்து பதிலடி கொடுக்க வேண்டும்- ஸ்ரீசாந்த்!
இந்தப் போட்டியில் விராட் கோலி சதம் அடித்தால் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலிக்கு கொடுக்கப்படும் தக்க பதிலடியாக இருக்கும் என முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.
16ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது மும்முறமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . நேற்று நடைபெற்ற 48ஆவது போட்டியில் குஜராத் அணி ராஜஸ்தான் அணியை எளிதாக வெற்றி பெற்றது . இதன் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு மிக அருகில் சென்று விட்டது குஜராத் . இன்று நடைபெற இருக்கும் நாற்பத்தி ஒன்பதாவது போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோத இருக்கின்றன . இந்த போட்டி 03; 30 மணி அளவில் துவங்க இருக்கிறது.
இதற்கு அடுத்து டெல்லியில் நடைபெற இருக்கும் 50ஆவது போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோத இருக்கின்றன . இரண்டு அணிகளுக்குமே இந்த போட்டி ஒரு முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது . பெங்களூர் அணியை பொறுத்த வரை இந்த வெற்றி அவர்களை முதல் நான்கு இடங்களுக்கு முன்னேற செய்யும் டெல்லி அணியை பொறுத்தவரை அவர்கள் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை இழக்காமல் தொடரில் இருக்க உதவும் .
Trending
இதனால் இரண்டு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் . பெங்களூர் மற்றும் லக்னோ அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் விராட் கோலி மற்றும் கௌதம் கம்பீர் இடையேயான மோதல் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது . டெல்லி அணியுடன் கடந்த போட்டியிலும் விராட் கோலி மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி ஆகியோர் கை கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
சௌரவ் கங்குலி பிசிசிஐ தலைவராக இருந்தபோது விராட் கோலிக்கு எதிராக அவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி செய்த சில விஷயங்கள் இருவருக்கும் இடையேயான மோதல் உருவாக காரணமாக இருந்தது . இந்நிலையில் இந்திய அணியின் உன்னால் வேகப்பந்துவீச்சாளரும் உலகக்கோப்பை வெற்றி பெற்ற அணியில் இடம் பெற்ற வருமான ஸ்ரீதரன் ஸ்ரீசாந்த் இந்தப் போட்டி பற்றி தொலைக்காட்சியில் பேசியிருக்கிறார் .
இது குறித்து கருத்து தெரிவித்த அவர், “டெல்லி மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தை காண மிகவும் ஆவலுடன் இருக்கிறேன் . என்னை பொருத்தவரை இந்த போட்டி வார்னர் மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு இடையேயான போட்டியாகவே பார்க்கிறேன் . மேலும் டெல்லி அணியின் வேகப்பந்துவீச்சாளர் நோர்ட்ஜே ஆர்.சி.பி வீரர்களுக்கு எதிராக பந்து வீசுவதை பார்க்க ஆவலுடன் இருப்பதாக தெரிவித்தார். இந்தப் போட்டியில் விராட் கோலி சதம் அடித்தால் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலிக்கு கொடுக்கப்படும் தக்க பதிலடியாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now