Advertisement

ஒருநாள், டெஸ்ட் அணிக்கான கேப்டன்சியிலிருந்து விராட் வெளியேற கூடாது - வீரேந்திர சேவாக்

இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளின் கேப்டன்சி பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகக்கூடாது என முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan November 09, 2021 • 11:18 AM
Virat Kohli shouldn't leave captaincy of ODIs and Test, feels Sehwag
Virat Kohli shouldn't leave captaincy of ODIs and Test, feels Sehwag (Image Source: Google)
Advertisement

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 12 சுற்றோடு வெளியேறியது. மேலும் முன்பே அறிவித்ததைப் போல இந்திய அணியின் டி20 கேப்டன் பதவிலிருந்தும் விராட் கோலி விலகிவிட்டார். 

மேலும் அவர் கூடிய விரைவில் இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பதவிலிருந்தும் விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அணியின் அடுத்த கேப்டனாக யார் நீடிப்பர் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

Trending


இந்நிலையில், இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளின் கேப்டன்சி பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகக்கூடாது என முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.

Also Read: T20 World Cup 2021

இதுகுறித்து பேசிய சேவாக், “இது விராட்டின் முடிவு, ஆனால் அவர் மற்ற இரண்டு வடிவங்களின் கேப்டன் பதவியை விட்டு விலகக்கூடாது. அவர் ஒரு வீரராக விளையாட விரும்பினால், அது அவருடைய முடிவு. அவரது கேப்டன்சியின் கீழ் இந்தியா சிறப்பாக விளையாடி வருவதாகவும், கேப்டனாக அவரது சாதனை சிறப்பாக இருப்பதாகவும் நான் உணர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement