ஓய்வு பெற்றுவிடலாம் என எண்ணினேன் - விராட் கோலி!
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி ஓய்வு பெற்றுவிடலாம் என இருந்ததாக தற்போது கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிடாலம் என எண்ணியதாக மனம் திறந்துள்ளார்.
அதில் பேசிய அவர், “நான் 71 சதங்கள் அடித்த பிறகு சச்சினையும் என்னையும் சிலர் ஒப்பிட்டு பேசத் தொடங்கி விட்டார்கள். சச்சின் தான் எனக்கு கிரிக்கெட் விளையாடவே ஊக்கமாக இருந்தவர். சச்சின் ரன்கள் அடிக்கும் போதெல்லாம் நமது வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருக்கிறது என்று நினைப்பு வரும். சச்சின் மற்றும் விவியன் ரிச்சர்ட்ஸ் ஆகியோரை எல்லாம் நம்முடன் ஒப்பிட்டு பார்க்கவே கூடாது.
Trending
அவர்களெல்லாம் வேறொரு தரம். சில சமயம் என்னை அவர்களுடன் ஒப்பிடும்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறேன் என்ற நினைப்பு மட்டும் வரும். ஆசியக் கோப்பைக்கு முன்பு வரை நான் சரியாக கிரிக்கெட் விளையாடவில்லை. தொடர்ந்து ஆட்டம் இழந்து வந்தேன். இதனால் ஆசிய கோப்பை தொடரில் விளையாடும் போது இதுதான் நான் சர்வதேச கிரிக்கெட் விளையாடப் போகும் கடைசி மாதமாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் 71ஆவது சதம் அடித்த பிறகு அனைத்தும் மாறிவிட்டது.
இந்த ஒரு சதத்திற்காகவா நான் ஒன்றரை ஆண்டுகளாக பாடுபட்டேன் என்ற நினைப்புத் தோன்றியது. சதம் வந்த உடன் அனைத்து எண்ணங்களும் ஒரு நொடியில் போய்விட்டது. அவ்வளவுதான் இதற்காக நான் பைத்தியக்காரத்தனமாக இருந்தேன் என்று என்னையே நான் திட்டிக் கொண்டேன். என் மனைவி அனுஷ்கா சர்மாவிடம் நான் உரையாடுவது விலை மதிப்பற்றது. நான் என்ன தவறு செய்கிறேன் என்பதை என் முகத்துக்கு நேராக உண்மையை சொல்லி விடுவார். அவர் மட்டும் என் அருகில் இல்லை என்றால் நான் ஆசிய கோப்பைக்கு முன்பெல்லாம் பைத்தியக்காரனாக தான் இருந்திருப்பேன். அவர்தான் என்னை மனிதர் ஆக்கினார்.
நான் ஐபிஎல் தொடரில் 900 ரன்களுக்கு மேல் அடித்தேன். இதன் மூலம் என் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது. ஒவ்வொரு முறையும் நான் அவ்வாறு விளையாட வேண்டும் என ரசிகர்கள் நினைக்கத் தொடங்கி விட்டனர். சில சமயம் அந்த ரெக்கார்டை பார்க்கும்போது எனக்கே கொஞ்சம் விசித்திரமாக தெரியும்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now