
உலகக்கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்பின் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 256 ரன்கள் சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 66 ரன்கள் சேர்த்தார். இதனால் இந்திய அணிக்கு 257 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.
தொடர்ந்து இந்திய அணியின் ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 88 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், ரோஜித் சர்மா 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பின் இந்திய அணியின் விராட் கோலி - சுப்மன் கில் கூட்டணி ஆட்டத்தை தொடர்ந்தது. விராட் கோலி வந்த 2ஆவது பந்திலேயே நோ-பால் வீசப்பட, அடுத்தடுத்து கிடைத்த இரு ஃபிரீ ஹிட் வாய்ப்பிலும் பவுண்டரி மற்றும் சிக்சரை விளாசி மிரட்டினார்.
இதனை தொடர்ந்து வழக்கம் போல் ரன்களை ஓடி ஓடி எடுக்க தொடங்கினார் விராட் கோலி. இதனிடையே சிறப்பாக விளையாடிய ஷுப்மன் கில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் ஆட்டத்தை முடித்து கொடுக்கும் பொறுப்பை விராட் கோலி எடுத்து கொண்டார். இவருக்கு உறுதுணையாக ஸ்ரேயாஸ் ஐயர் கம்பெனி கொடுக்க, இந்திய அணி ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.