
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடக்கிறது. இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி ஆகஸ்ட் 28ஆம் தேதி துபாயில் நடக்கிறது. இந்த தொடரில் 3 முறை இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பிரதான சுற்று தொடங்க இன்னும் ஒரு வாரம் கூட இல்லை. இந்த நிலையில் ஜிம்பாப்வே தொடரில் இடம்பெறாத முன்னணி வீரர்கள் ஏற்கனவே ஆசிய கோப்பை தொடருக்காக தங்களது பயிற்சியை தொடங்கிவிட்டனர். இந்திய அணி நாளை மறுநாள் துபாய்க்கு புறப்பட்டுச் செல்லும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில் இங்கிலாந்து தொடருக்கு பிறகு எந்த கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாத விராட் கோலி தனது நேரத்தை குடும்பத்தாருடன் செலவிட்டு வருகிறார். சமீப காலமாக விராட் கோலியின் பேட்டிங் சிறப்பாக இல்லை என்பது கிரிக்கெட் பார்க்கும் அனைவருக்கும் தெரிந்த விஷயம். டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் ஸ்ட்ரைக் கேட்டு பாதாளத்திற்கு சென்று விட்டது.