
நடப்பாண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடருக்காக அமீரகம் சென்றடைந்துள்ள இந்திய அணி இன்று முதல் பயிற்சி முகாமை தொடங்கியுள்ளது.
இந்த ஆசிய கோப்பை தொடர் இந்திய அணிக்கு எவ்வளவு முக்கியமோ, அதனை விட விராட் கோலிக்கும் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஒரு சதம் கூட அடிக்காமல் 1,000 நாட்களை கடந்துவிட்ட விராட் கோலி நீண்ட ஓய்வுக்கு பிறகு நேரடியாக ஆசிய கோப்பையில் பங்கேற்கிறார். இதில் சிறப்பாக விளையாடினால் தான் கோலிக்கு டி20 உலகக்கோப்பை தொடரில் வாய்ப்பு கிடைக்கும்.
விராட் கோலியின் இந்த மோசமான ஃபார்முக்கு அவரின் பேட் தான் முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டும் வலுத்து வருகிறது. ட்ரைவ் ஷாட்கள் விளையாடும் போது, அவருக்கு ஏற்றவாறு பேட்டின் தன்மை இல்லாமல் இருப்பதால், அடிக்கடி அவுட்டாகிவிடுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த பிரச்சினைக்கு தற்போத் தீர்வு காணப்பட்டுள்ளது.