Advertisement

கிங் கோலியின் பிறந்தநாளுக்கு குவியும் வாழ்த்துக்கள்!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் என தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றன. 

Bharathi Kannan
By Bharathi Kannan November 05, 2021 • 13:29 PM
Virat Kohli turns 33: Virender Sehwag, Ajinkya Rahane lead birthday wishes for 'once in a generation
Virat Kohli turns 33: Virender Sehwag, Ajinkya Rahane lead birthday wishes for 'once in a generation (Image Source: Google)
Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக செயல்பட்டு வருபவர் விராட் கோலி. தோனிக்கு அடுத்தபடியாக இந்திய அணியின் நம்பிக்கையாக இவரை ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.

கோலி தற்போது கடினமான சூழல்களை எதிர்கொண்டு வந்தாலும், அவரின் பிறந்தநாளன்று வாழ்த்து மழை பொழிய ரசிகர்கள் மறக்கவில்லை.

Trending


விராட் கோலி இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ள இவர், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் 60 சதவீதத்திற்கும் மேல் வெற்றி சதவீதத்தை வைத்துள்ளார். 

அதே போல டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமான கேப்டன் கோலிதான். அவர் தலைமையில் விளையாடிய 65 போட்டிகளில், இந்தியா 38 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. 11 போட்டிகள் டிரா ஆகியுள்ளன. 16 தோல்விகள். இவ்வளவு புகழை பெற்றுள்ள கோலிக்கு இன்று ரசிகர்கள் வாழ்த்து கூறிய வண்ணம் உள்ளனர்.

விராட் கோலிக்கு பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிசிசிஐ, “அவர் சிரித்தபடியான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில் எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும் கேப்டன் விராட் கோலி. இன்று இரவு வெற்றியை பரிசாக கொடுப்பாரா என்று குறிப்பிட்டுள்ளது. இதே போல ஆர்சிபி அணியும் வாழ்த்து கூறியுள்ளது.

இதுகுறித்து போடப்பட்டுள்ள பதிவில், ஆர்சிபி அணிக்காகவும், ரசிகர்களுக்காகவும், அணியினருக்காகவும் நீங்கள் செய்த அனைத்திற்கும் நன்றி கோலி. நீண்ட காலம் நலமுடன் வாழ வேண்டும் கிங் கோலி என பிறந்தநாள் வாழ்த்தை கூறியுள்ளது.

இதுமட்டுமல்லாமல் கிரிக்கெட் வீரர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில், கடினமான நேரங்கள் எப்போதும் நீடிக்காது. ஒரு தலைமுறையின் நாயகன் நீங்கள். இனி பிறந்தநாள் வாழ்த்துகள் விராட் கோலி என கூறியுள்ளார். இதே போல அஜிங்கியா ரகானேவும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Also Read: T20 World Cup 2021

கடந்த 2008ம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச அரங்கில் அறிமுகமான விராட் கோலி தற்போது வரை 23, 159 சர்வதேச ரன்களை குவித்துள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை மற்றும் 2013ஆம் சாம்பியன்ஸ் ட்ரோபி வென்ற இந்திய அணியில் இடம் பிடித்த முக்கிய வீரர் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement