
Virat Kohli unlikely to remain Virat Kohli unlikely to remain ODI captain? - Report (Image Source: Google)
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி சொதப்பி வருகிறது.
முதல் போட்டியிலேயே பாகிஸ்தானிடம் தோல்வியடைந்த நிலையில் நியூசிலாந்திடமும் தோல்வி மட்டுமே மிஞ்சியது. இதனால் அரையிறுதி வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு இது மிக முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது. ஐசிசி தொடர்களில் இதுவரை ஒரு கோப்பையை கூட வென்றுக்கொடுக்காத விராட் கோலி இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் டி20 அணி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் இந்த உலகக்கோப்பையில் கோப்பையை வென்று கொடுத்துவிட்டு வெளியேறலாம் என்ற கட்டாயம் இருந்தது.