
டி20 உலகக் கோப்பைப் போட்டி தொடங்கு முன்பு, டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் விராட் கோலி. அடுத்ததாக, ஐபிஎல் 2021 போட்டிக்குப் பிறகு ஆர்சிபி அணி கேப்டன் பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார்.
கோலியின் முடிவுக்குப் பிறகு இந்திய டி20 அணி கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். இச்சமயத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் கேப்டனாக ரோஹித் சர்மாவை நியமித்து சர்ச்சையை ஏற்படுத்தியது பிசிசிஐ. இதனால் 2023 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியை வழிநடத்த வேண்டும் என்று ஆசைப்பட்ட கோலியின் கனவு தகர்ந்தது.
அதன்பின் கடந்த ஜனவரி 15 ஆம் தேதியன்று, இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்தார். விலகல் குறித்து கோலி, "என்னுடைய பணியை முழுமையாக நேர்மையாகச்செய்தேன், நான் பதவியிலிருந்து இறங்க சரியான தருணம்" என்று கோலி தெரிவித்திருந்தார்.