
சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, கடந்த 2 ஆண்டுகளாக ஃபார்மில் இல்லாமல் தவித்துவருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்கள் அடித்துள்ள விராட் கோலி, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சதம் கூட அடிக்கவில்லை.
71ஆவது சதத்தை அடிப்பதற்கான அவரது காத்திருப்பு இன்னும் தொடர்கிறது. ஐபிஎல்லிலும் அவர் சரியாக ஆடவில்லை. ஐபிஎல் 15ஆவது சீசனில் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 16 போட்டிகளில் வெறும் 341 ரன்கள் மட்டுமே அடித்தார். அவரது தரத்திற்கு இது மிகவும் குறைவான ஸ்கோர்.
டி20 உலக கோப்பை நெருங்கும் நிலையில், விராட் கோலியின் மோசமான ஃபார்ம் இந்திய அணிக்கு கவலையளிக்கும் விதமாக அமைந்துள்ளது. விராட் கோலி தொடர்ச்சியாக கிரிக்கெட் ஆடிக்கொண்டிருப்பதால், அவர் சோர்வடைந்திருக்கிறார். எனவே அவருக்கு ஓய்வு தேவை என்று ரவி சாஸ்திரி உள்ளிட்ட முன்னாள் ஜாம்பவான்கள் பலரும் அறிவுறுத்தியிருந்தனர். அதேபோலவே தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.