ஷாஹீன் அஃப்ரிடிரையை விராட் கோலி அசால்டாக சமாளிப்பார் - ஹர்பஜன் சிங்!
விராட் கோலியின் தற்போதைய பார்மை வைத்து பார்க்கும் போது ஷாகின் அஃப்ரிடியின் பந்துவீச்சை அவரால் அசால்டாக துவம்சம் செய்ய முடியும் என முன்னாள் இந்திய வீரரான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகளை இலகுவாக வீழ்த்தி வெற்றி வாகை சூடிய இந்திய அணி 13ம் தேதி நடைபெறும் தனது அடுத்த போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி என்றால் பரபரப்பிற்கு பஞ்சமே இருக்காது என்பதால், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டிக்காக மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியே கிரிக்கெட் வட்டாரத்தின் தற்போதைய ஹாட் டாப்பிக்காக இருப்பதால், முன்னாள்,இந்நாள் வீரர்கள் என பலரும் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் தொடர்ந்து வருகின்றனர். அந்தவகையில், இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய முன்னாள் இந்திய வீரரான ஹர்பஜன் சிங், ஷாகின் அஃப்ரிடியால் இந்த முறை விராட் கோலியை கட்டுப்படுத்த முடியாது என தெரிவித்துள்ளார்.
Trending
இது குறித்து பேசிய ஹர்பஜன் சிங், “விராட் கோலி – ஷாகின் அஃப்ரிடி இடையேயான மோதல் இருவருக்குமே சவாலானது தான். ஆனால் விராட் கோலி தற்போது இருக்கும் ஃபார்மை வைத்து பார்க்கையில் அவரால் ஷாகின் அஃப்ரிடியின் பந்துவீச்சை இலகுவாக எதிர்கொள்ள முடியும் என்றே கருதுகிறேன். ஷாகின் அப்ரிடி துல்லியமாக பந்துவீசக்கூடியவர், அவரது பந்துவீச்சை எதிர்கொள்வது அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் சவாலானது தான்.
குறிப்பாக புதிய பந்தை கையாளுவதில் ஷாகின் அப்ரிடி வல்லவர் என்பதால் அவரது பந்துவீச்சில் பேட்ஸ்மேன்கள் ஸ்டெம்பை இழந்தோ, எல்பிடபிள்யூ முறையிலோ விக்கெட்டை இழக்க நேரிடும். ஆனால் இதை விராட் கோலி அசால்டாக சமாளிப்பார் என்றே கருதுகிறேன்” என்று தெரிவிதுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now