Advertisement
Advertisement
Advertisement

விராட் கோலியின் பிரச்சனைக்கு இவர்கள் இருவரும் தான் தீர்வு - மாண்டி பனேசர்!

விராட் கோலியை மீண்டும் பழைய ஃபார்முக்கு கொண்டு வர 2 பேரால் மட்டுமே முடியும் என மாண்டி பனேசர் கூறியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan July 15, 2022 • 19:00 PM
Virat may be a big brand but he's not that same cricketer anymore, says Monty Panesar
Virat may be a big brand but he's not that same cricketer anymore, says Monty Panesar (Image Source: Google)
Advertisement

இங்கிலாந்து தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்த தொடருக்கான அணியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டது தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக மோசமான ஃபார்மில் இருந்து வரும் விராட் கோலிக்கு அவ்வபோது ஓய்வுகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் அவர் சொதப்பிக்கொண்டே தான் இருக்கிறார். இங்கிலாந்துடனான டி20 தொடரில் ஏமாற்றிய அவர், ஒருநாள் போட்டியிலும் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

Trending


இந்நிலையில் கோலியை மீண்டும் ஃபார்முக்கு வர இங்கிலாந்து முன்னாள் வீரர் மாண்டி பனேசர் ஐடியா கூறியுள்ளார். அதில், “கோலியை மீட்டுக்கொண்டுவதற்கு சச்சின் டெண்டுல்கர் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோரால் மட்டுமே முடியும். ஓய்வு நேரத்தை கோலி அவர்களுடன் செலவழிக்க முயற்சி செய்ய வேண்டும்.

சச்சினை தனது குருவாக மதிக்கக்கூடியவர் விராட் கோலி. அவருடன் அமர்ந்து ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். பயிற்சியின் போது கோலியுடன் சச்சின் இருந்தால் பெரும் மாற்றத்தை கொடுக்கும். இதே போல கோலியின் நெருங்கிய நண்பராக யுவ்ராஜ் சிங் இருக்கிறார். 

பெரிய இடைவெளிக்கு பின்பு யுவ்ராஜ் கம்பேக் தந்துள்ளார். எனவே அவருடன் ஆலோசனை நடத்தி கோலியும் வர முடியும்” என கூறியுள்ளார்.

ஃபார்ம் அவுட்டில் இருந்த ஹர்திக் பாண்ட்யா, நீண்ட காலமாக ஓய்வு எடுத்துக்கொண்டு பயிற்சி பெற்றார். அதன் விளைவாக தற்போது நல்ல ஃபார்மில் விளையாடி வருகிறார். இதே போன்று விராட் கோலியும் தனது விருப்பத்திற்கு ஏற்ப பயிற்சி பெற்று ஃபார்முக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement