
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி துவங்கிய 15ஆவது ஆசியக் கோப்பை தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தங்களது முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடிய இந்திய அணியானது ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அதனை தொடர்ந்து ஹாங்காங் அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியிலும் 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று “சூப்பர் 4” சுற்று இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் என ஆறு அணிகள் பங்கேற்று விளையாடி வரும் இந்த ஆசிய கோப்பை தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் வேளையில் இந்திய அணி தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இந்திய அணி தற்போதுள்ள பலத்தின் அடிப்படையில் பார்க்கையில் எளிதாக இந்த ஆசிய கோப்பை தொடரினை கைப்பற்றி நடப்பு சாம்பியனான அவர்கள் மீண்டும் கோப்பையை கைப்பற்றுவார்கள் என்று தெரிகிறது.