
சர்வதேச கிரிக்கெட்டில் டி20 மற்றும் டெஸ்ட் வடிவத்திற்கும் உலக கோப்பைகள் நடைபெற்று வந்தாலும், ஒருநாள் கிரிக்கெட்டில் நடத்தப்படும் உலகக் கோப்பைக்கு எப்பொழுதும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு உண்டு. மேலும் கிரிக்கெட்டுக்கு என நடத்தப்பட்ட முதல் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் வடிவத்திற்குதான் நடத்தப்பட்டது.
முதல் உலகக் கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியும், அதிக முறை உலக கோப்பையை ஆஸ்திரேலியா கைப்பற்றியதும், இந்தியா இரண்டு முறை கைப்பற்றியதும் என ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாறுகள் நாம் அறிந்ததே.
2011ஆம் ஆண்டுக்கு பிறகு சுமார் 12 வருடங்கள் கழித்து இந்தியாவில் தற்பொழுது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் நடக்க இருக்கிறது. இதில் ஒரு விசேஷமாக இந்த உலகக் கோப்பை தொடர் முதல்முறையாக இந்தியாவில் நடத்தப்பட இருக்கிறது. ஆரம்பத்தில் நடந்த இரண்டு உலகக் கோப்பைகள் ஆசிய நாடுகளுடன் பகிர்ந்து நடத்தப்பட்டது.