
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது . இதில் இதுவரை 24 போட்டிகள் முடிவடைந்த நிலையில் ராஜஸ்தான் அணி முதல் இடத்திலும் லக்னோ அணி இரண்டாம் இடத்திலும் புள்ளிகள் பட்டியலில் இடம் பெற்று இருக்கின்றன . நேற்று நடைபெற்ற 24ஆவது போட்டியில் பெங்களூர் மற்றும் சென்னை அணிகள் மோதின பரபரப்பான இந்த போட்டியில் சென்னை அணி எட்டு ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது . சென்னை அணிக்காக கான்வே மிகச் சிறப்பாக ஆடி 83 ரன்கள் எடுத்திருந்தார். பெங்களூர் அணிக்காக மேக்ஸ்வெல் 76 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தார் .
இந்தப் போட்டியில் மொத்தம் 33 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது . நேற்றைய கிரிக்கெட் போட்டியின் நேரலையின் போது இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர்கள் விரேந்திர சேவாக் மற்றும் முரளி விஜய் ஆகியோர் கலந்து கொண்டனர் . அப்போது பேசிய சேவாக் 2012 ஆம் ஆண்டின் ஐபிஎல் கிரிக்கெட் தொடர்களில் தன்னால் மறக்க முடியாத போட்டி பற்றி கூறினார் .
2012 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர்களில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. புள்ளிகள் பட்டியலிலும் தொடர் முழுவதுமே முதல் இரண்டு இடங்களில் ஆதிக்கம் செலுத்தி வந்தது சேவாக், டேவிட் வார்னர், ஜெயவர்த்தனா, இர்ஃபான் பதான் என நட்சத்திர வீரர்களால் நிரம்பியிருந்த டெல்லி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது .