
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் தற்போது பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில், நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகள் மோதின இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . இதனால் டெல்லிய அணி மூன்றாவது தொடர் தோல்வியை சந்தித்தது . முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 199 ரன்களை எடுத்தது.
இதனைத் தொடர்ந்து 200 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டெல்லி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது . முதல் ஓவரிலேயே பிரித்விஷா மற்றும் மனிஷ் பாண்டே ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தி சிறப்பான துவக்கத்தை அமைத்துக் கொடுத்தார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ட்ரெண்ட் போல்ட் . அதன் பிறகு டெல்லி அணியால் மீண்டும் ஆட்டத்திற்குள் வர முடியவில்லை.
அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர் மட்டும் பொறுமையாக விளையாடி 55 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார் . வார்னரின் இந்த ஆட்டம் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது . இதுகுறித்து பேசி இருக்கும் டெல்லி அணியின் முன்னாள் கேப்டனும் இந்திய அணியின் முன்னாள் அதிரடி துவக்க வீரருமான விரேந்தர் சேவாக் வார்னரை கடுமையாக விமர்சித்துள்ளார்.