
இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஆரம்பிக்கிறது. மற்ற இரண்டு கிரிக்கெட் வடிவங்களுக்கு உலகக்கோப்பை தொடர்கள் இருந்தாலும், நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடப்பதால் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு ரசிகர்களிடம் எப்பொழுதும் வரவேற்பு உண்டு. மேலும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை பல நினைவுகளை வைத்திருக்கக் கூடியது.
இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் சந்திக்கிறது. கடந்த முறை விராட் கோலி தலைமையில் சந்தித்து அரையிறுதியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது. இறுதியாக இந்திய அணி 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மகேந்திர சிங் தோனி தலைமையில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை கைப்பற்றியது.
அதற்கடுத்து 12 ஆண்டுகளாக எந்த வடிவத்திலும் இந்திய அணி உலகக்கோப்பையை கைப்பற்றவில்லை. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும் லெஜெண்ட் வீரருமான வீரேந்திர சேவாக், நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் எந்த வீரர் அதிகபட்ச ரன்கள் எடுப்பார்? என்கின்ற தனது கணிப்பை வெளியிட்டு பேசியிருக்கிறார்.