இந்திய அணியின் பயிற்சியாளராக லக்ஷ்மண்?
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் நியமிக்கப்படவுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் ப்ளே ஆஃப் சுற்றை நெருங்கிவிட்டது. வரும் 29ம் தேதி இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது.
ஐபிஎல் முடிந்தவுடன் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுடன் டி20 தொடரில் மோதவுள்ளது. இதே போல அயர்லாந்து உடனான தொடரிலும் மோதுகிறது.
Trending
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் ஜூன் 17ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதே போல அயர்லாந்து அணியுடன் ஜூன் 26 மற்றும் 28ஆம் தேதிகளில் 2 டி20 போட்டிகள் நடைபெறுகிறது.
இதற்கான வீரர்கள் தேர்வு தான் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சீனியர் வீரர்களுக்கு ஓய்வு தந்துவிட்டு, ஐபிஎல் தொடரில் கலக்கி வீரர்களுக்கு வாய்ப்பு தருகின்றனர்.
இந்நிலையில் இந்த இரு தொடர்களில் இருந்து ராகுல் டிராவிட்டும் வெளியேறியுள்ளார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு வரும் ஜூலை மாதம் செல்ல வேண்டும் என்பதால் அவருக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. எனவே இந்த இரண்டு தொடர்களுக்கும் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மண் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்படவுள்ளார்.
இந்திய அணி ஏற்கனவே கடந்தாண்டு இங்கிலாந்து, இலங்கை என இரண்டு தொடர்களுக்கு இரண்டு வெவ்வேறு அணிகளை உருவாக்கியிருந்தது. அதே போன்று தான் தற்போதும் நடைபெறுகிறது. லக்ஷ்மண் தற்போது பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக உள்ளார். எனவே வீரர்களை கையாள்வது அவருக்கு மிகவும் சுலபமாக இருக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பந்த், கே.எல்.ராகுல், பும்ரா என அனைவருக்கும் ஓய்வு தரப்பட்டுள்ளதால், கேப்டன்சி பதவி ஷிகர் தவானுக்கு செல்ல அதிக வாய்ப்புள்ளது. அப்படி இல்லையென்றால் ஹர்திக் பாண்டியாவுக்கும் கேப்டன்சி கதவுகள் தட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now