
இந்திய அணயின் தலைமை பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட், பரத்தின் விக்கெட் கீப்பங் திறமை குறித்து சிலாகித்து பேசியதாக லக்ஷ்மண் குறிப்பிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட்டில் சாஹாவுக்கு அடுத்து விக்கெட் கீப்பிங்கில் திறமை படைத்தவர் பரத் என டிராவிட் கூறியதாக லக்ஷ்மண் தெரிவித்துள்ளார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதுகுறித்து பேசிய அவர், "பரத்தின் விக்கெட் கீப்பிங் திறமையை ராகுல் டிராவிட் பாராட்டியது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. இந்திய கிரிக்கெட்டில் விருத்திமான் சாஹாவுக்கு அடுத்தபடியாக பாரதத்திற்கு நல்ல கீப்பிங் திறமை இருப்பதாக அவர் என்னிடம் கூறினார்" என்றார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், சிறப்பான கேட்ச்கள் மற்றும் புத்திசாலித்தனமான ஸ்டம்பிங் மூலம் அனைவரையும் கவனத்தையும் ஈர்த்திருந்தார் பரத். அதேபோல், சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த டாம் லாதம், யங் ஆகியோரின் பார்ட்னர்ஷிப்பை ரஹானேவை வற்புறுத்தி டிஆர்எஸ் எடுக்க வைத்த முடிவுக்கு கொண்டுவந்தார்.