Advertisement
Advertisement
Advertisement

தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் நியமனம்?

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் நியமனம்?
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் நியமனம்? (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 28, 2024 • 12:14 PM

இந்திய அணி தற்சமயம் நியூசிலாந்து அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதனையடுத்து இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலும், அதன்பின் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரிலும் விளையாடவுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
October 28, 2024 • 12:14 PM

அந்தவகையில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி நவம்பர் 08ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது நவம்பர் 14ஆம் தேதி முடிவடையவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டி டர்பனிலும், இர்னடாவது போட்டி க்கெபெர்ஹாவிலும், மூன்றாவது போட்டி செஞ்சூரியனிலும், நான்காவது போட்டி ஜொஹன்னஸ்பர்க்கிலும் நடைபெறவுள்ளது. 

Trending

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. அதன்படி இத்தொடருக்கான இந்திய அணியில் அறிமுக வீரர்களான ரமந்தீப் சிங், வைஷாக் விஜயகுமார், யாஷ் தயாள் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுடன் ஆவேஷ் கான், அக்ஸர் படேல் உள்ளிட்டோரும் இந்திய டி20 அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர்.

மேற்கொண்டு சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள காரணத்தால் வாஷிங்டன் சுந்தர், ரிஷப் பந்த், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை. இதுதவிர்த்து காயம் காரணமாக ஷிவம் தூபே, மயங்க் யாதவ், ரியான் பராக் மற்றும் குல்தீப் யாதவ் உள்ளிட்டோருக்கும் இடம் கிடைக்கவில்லை. 

இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் விவிஎஸ் லக்ஷ்மண் செயல்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளனர். ஏனெனில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள காரணத்தால் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் உள்பட பயிற்சியாளர் குழுவுக்கு இத்தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

 

இதான் காரணமாக விவிஎஸ் லக்ஷ்மண் தென் ஆப்பிரிக்க டி20 தொடருக்கான இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் செயல்பட்டதுடன, 5 போட்டிகள் கொண்ட அத்தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

இந்திய டி20 அணி: சூர்யகுமார் யாதவ் (கே), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா, ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல், ராமன்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், விஜய்குமார் வைஷாக், அவேஷ் கான், யாஷ் தயாள்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement