
Wahab Riaz names the toughest batsman to bowl (Image Source: Google)
சர்வதேச கிரிக்கெட்டில் வேகப்பந்துவீச்சுக்கு பெயர்போன பாகிஸ்தான் அணியில் ஒருவர் வஹாப் ரியாஸ். 2008ஆம் ஆண்டிலிருந்து பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிவரும் வஹாப் ரியாஸ், 27 டெஸ்ட் மற்றும் 91 ஒருநாள் போட்டிகளில் ஆடி முறையே 83 மற்றும் 121 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் சீனியர் வேகப்பந்துவீச்சாளரான வஹாப் ரியாஸ், இலங்கையில் நடக்கும் லங்கா பிரீமியர் லீக் தொடரில் ஜாஃப்னா கிங்ஸ் அணிக்காக ஆடுகிறார்.
இந்நிலையில், வஹாப் ரியாஸ் யாருக்கு பந்துவீசுவது கடினம் என்று கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய வஹாப் ரியாஸ், “ரோஹித் சர்மா, பாபர் அசாம் மாதிரி சிறந்த வீரர்கள் பலர் உள்ளனர். ஆனால் பந்துவீசவே நான் பயப்பட்ட ஒரு வீரர் இருக்கிறார். ஏபி டிவில்லியர்ஸ் தான் அது.