
Want to learn whatever I can from Rahul sir, says Venkatesh Iyer (Image Source: Google)
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி ஜெய்ப்பூரில் இன்று நடைபெறுகிறது.
மேலும் இத்தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவும், தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டும் நியமிக்கப்பட்டுள்ளதால், இக்கூட்டணி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளனர்.
அதேசமயம் இத்தொடருக்கான இந்திய அணியின் ஐபிஎல் தொடரில் அசத்திய ருதுராஜ் கெய்க்வாட், ஹர்ஷல் படேல், வெங்கடேஷ் ஐயர் போன்ற இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.