Advertisement

பகலிரவு டெஸ்ட் பயிற்சி ஆட்டம்: மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து!

இந்தியா - ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டுள்ளது.

Advertisement
பகலிரவு டெஸ்ட் பயிற்சி ஆட்டம்: மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து!
பகலிரவு டெஸ்ட் பயிற்சி ஆட்டம்: மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Nov 30, 2024 • 01:45 PM

பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரின் இந்த சீசன் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியானது 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலைப் பெற்றுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
November 30, 2024 • 01:45 PM

இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். மேலும் இப்போட்டிக்கான இரு அணிகளின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. 

Trending

இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணியானது ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிக்கு எதிரான இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டிருந்தது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான பயிற்சி போட்டியானது இன்று கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தயாராகின.

இந்நிலையில் இப்போட்டி தொடங்கும் முன் மழை பெய்த கரணத்தால் போட்டியின் டாஸ் நிகழ்வானது தாமதமானது. பின் தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால் இந்த பயிற்சி போட்டியின் முதல் நாள் ஆட்டம் முழுவதுமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இப்போட்டியின் டாஸ் நிகழ்வானது நாளை காலை 8.40 மணிக்கு நடைபெறும் என்றும், போட்டி 9.10 மணிக்கு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் 50 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்த இரு அணிகளும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிரைம் மினிஸ்டர்ஸ் லெவன் அணி: ஜாக் எட்வர்ட்ஸ்(கே), மாட் ரென்ஷா, ஜாக் கிளேட்டன், ஆலிவர் டேவிஸ், ஜேடன் குட்வின், சாம் ஹார்பர், சார்லி ஆண்டர்சன், சாம் கான்ஸ்டாஸ், ஸ்காட் போலண்ட், லாயிட் போப், ஹன்னோ ஜேக்கப்ஸ், மஹ்லி பியர்ட்மேன், ஐடன் ஓ கானர், ஜெம் ரியான்

Also Read: Funding To Save Test Cricket

இந்திய டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா (கே), ஜஸ்பிரித் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், ஷுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement