
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ள நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் அயர்லாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த இலங்கை அணி பதும் நிஷங்கா மற்றும் குசால் மெண்டிஸ் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் குசால் மெண்டிஸ் 13 ரன்களிலும், கமிந்து மெண்டிஸ் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்தார்.
மற்றொரு தொடக்க வீரர் பதும் நிஷங்காவும் 23 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய சமரவிக்ரமா 13 ரன்களுக்கும், அசலங்கா 6 ரன்களுக்கும், கேப்டன் வநிந்து ஹசரங்கா 26 ரன்களுக்கும், துஷன் ஷன்கா 23 ரன்களுக்கும் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஏஞ்சலோ மேத்யூஸ் 32 ரன்களைச் சேர்த்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணியானது 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்களைச் சேர்த்தது. அயர்லாந்து அணி தரப்பில் ஜோஷுவா லிட்டில், பேரி மெக்கர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய அயர்லாந்து அணிக்கு கேப்டன் பால் ஸ்டிர்லிங் - ஆண்ட்ரூ பால்பிர்னி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதில் ஆண்ட்ரூ பால்பிர்னி 16 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து கேப்டன் 21 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலிய திரும்பினர். அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லோர்கன் டக்கர் 11 ரன்களிலும், ஹாரி டெக்டர் 13 ரன்களிலும், ஜார்ஜ் டெக்ரேல் 17 ரன்களிலும், கரெத் டெலானி 4 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.