Advertisement

IND vs WI: டி20 தொடரிலிருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்!

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இந்திய ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக விலகினார்.

Advertisement
Washington Sundar Ruled Out Of West Indies T20Is
Washington Sundar Ruled Out Of West Indies T20Is (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Feb 14, 2022 • 09:49 PM

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடிவருகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan
February 14, 2022 • 09:49 PM

இதில் அகமதாபாத்தில் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது.

Trending

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் வரும் 16ஆம் தேதிமுதல் கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்நிலையில் காயம் காரணமாக இந்திய அணி ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார். மேலும் அவருக்கு மாற்றாக பிசிசிஐ எந்த மாற்று வீரரையும் அறிவிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக காயம் காரணமாக இந்திய அணியின் கேஎல் ராகுல், அக்ஸர் படேல் ஆகியோர் டி20 தொடரிலிருந்து விலகினர். அவர்களுக்கு மாற்றாக ருதுராஜ் கெய்க்வாட், தீபக் ஹூடா ஆகியோர் டி20 அணியில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement