
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நடப்ப் உலகக்கோப்பையில் ஆஃப்கானிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது. அதற்கு முன்னதாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளிடம் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்து இருந்தது. மொத்தம் மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள பாகிஸ்தான் அணி, அனைத்து போட்டிகளிலும் பீல்டிங்கில் மோசமாக சொதப்பி இருந்தது.
இதை அடுத்து பாகிஸ்தான் அணி வீரர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக உடற்தகுதி தேர்வு செய்யவில்லை என்ற உண்மை வெளியாகி இருந்தது. இந்த நிலையில், ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 282 ரன்கள் குவித்தும் தோல்வி அடைந்து இருந்தது பாகிஸ்தான் அணி. ஆப்கானிஸ்தான் அணி 2 விக்கெட் மட்டுமே இழந்து 283 ரன்கள் வெற்றி இலக்கை எட்டியது. பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு மோசமாக இருந்தது. ஆனால், அதைவிட பீல்டிங் மோசமாக இருந்தது.
இந்த நிலையில் தான் பாகிஸ்தான் வீரர்களின் உடற்தகுதியை பற்றிய உண்மையையும், அவர்கள் ஒரு நாளைக்கு எட்டு கிலோ ஆட்டுக் கறி உண்கிறார்கள் என்ற உண்மையையும் போட்டு உடைத்துள்ளார் வாசிம் அக்ரம். இதுகுறித்து பேசிய அவர், “இன்று மிகப் பெரிய அவமானம் நடந்தது. 280 ரன்கள் இலக்கை வெறும் 2 விக்கெட் மட்டும் இழந்து எட்டுவது என்பது மிகப் பெரிய விஷயம். பிட்ச்சை குறை கூறுவதை விட பாகிஸ்தான் வீரர்களின் பீல்டிங்கை பாருங்கள். அவர்களின் உடற்தகுதியை பாருங்கள்.