Advertisement

இந்தியா vs ஆஸ்திரேலிய தொடர்; பிசிசிஐ-யை எச்சரித்த வாசிம் அக்ரம்!

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்பு இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் விளையாடும் முடிவை பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், தொலைக்காட்சி வர்ணனையாளருமான வாசிம் அக்ரம் விமர்சித்துள்ளார்.

Advertisement
இந்தியா vs ஆஸ்திரேலிய தொடர்; பிசிசிஐ-யை எச்சரித்த வாசிம் அக்ரம்!
இந்தியா vs ஆஸ்திரேலிய தொடர்; பிசிசிஐ-யை எச்சரித்த வாசிம் அக்ரம்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 18, 2023 • 02:13 PM

இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. அந்தவரிசையில் ஆசிய அணிகள் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடின. 

Bharathi Kannan
By Bharathi Kannan
September 18, 2023 • 02:13 PM

இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியை வீழ்த்தி 8ஆவது முறையாக ஆசிய கோப்பையை வென்று அசத்தியது. இதையடுத்து இம்மாத இறுதியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடாவுள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியும் இன்று அறிவிக்கப்படவுள்ளது. 

Trending

இந்நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்பு இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் விளையாடும் முடிவை பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், தொலைக்காட்சி வர்ணனையாளருமான வாசிம் அக்ரம் விமர்சித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “உலகக்கோப்பைக்கு முன்பு இந்திய அணி ஆஸ்திரேலிய தொடரில் விளையாடுவது தேவையற்றது. ஏனென்றால் இது இந்திய வீரர்களுக்கு கூடுதல் சோர்வை ஏற்படுத்தி விடும். ஆகஸ்டு மாதத்தில் இருந்து இந்திய அணி தொடர்ந்து விளையாடி வருகிறது.

உலகக்கோப்பை மற்றும் ஆஸ்திரேலிய தொடர் இடையே இந்திய வீரர்களுக்கு ஓய்வு எடுக்க சிறிது நேரமே இருக்கிறது. இதனால் இந்த தொடரில் இந்திய அணி பங்கேற்பது சிறந்ததாக இருக்காது. உலகக்கோப்பையில் இந்திய அணி வெவ்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கும். 

பயணம் செய்யவே ஒருநாள் ஆகிவிடும். இதனால் உலகக்கோப்பையில் ஆற்றலுடன் இருப்பது முக்கியம். இந்த நேரம் ஆஸ்திரேலியாவுடன் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவது ஏன்? என தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement