
ஐசிசி நடத்தும் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தாண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த முறை உலககோப்பையை இந்திய கிரிக்கெட் வாரியம் எடுத்து நடத்துகிறது. நான்காவது முறையாக இந்திய கிரிக்கெட் வாரியம் ஒருநாள் உலகக் கோப்பையை நடத்துகிறது. கடைசியாக 2011 ஆம் ஆண்டு எடுத்து நடத்தியது. அப்போதுதான் இந்திய அணியும் கடைசியாக உலககோப்பையை வென்றது.
அதற்கு அடுத்ததாக, 2015 மற்றும் 2019 உலககோப்பைகளில் இந்திய அணி வெற்றி பெறும் அணியாக கருதப்பட்டது. ஆனால் கடைசியில் கோப்பையை வெல்ல முடியவில்லை. இம்முறை கோப்பையை வென்று மீண்டும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு பெருமிதம் சேர்க்க வேண்டும் என்று பல திட்டங்களை பிசிசிஐ செயல்படுத்தி வருகிறது.
இதனால் உலகக் கோப்பை தொடருக்கு முன்பு பல இருதரப்பு போட்டிகளில் பங்கேற்று வரும் இந்திய அணி பல இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுத்து சரியான உலகக்கோப்பை தொடருக்காண அணியை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதன் காரணமாக முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் இருதரப்பு தொடர்களில் பங்கேற்ற விளையாட்டு வரும் இளம் வீரர்களுக்கு தங்களுடைய அறிவுரைகளை கொடுத்து வருகின்றனர்.