-lg1-mdl.jpg)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர். இவர் இந்திய அணிக்காக 2000ஆம் ஆண்டு அறிமுகமாகி, 31 டெஸ்ட் போட்டிகளிலும் 2 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். அதில் இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 சதங்கள் மற்றும் 11 அரைசதங்கள் என மொத்தமாக 1,944 ரன்களைச் சேர்த்திருந்தாலும், இந்திய அணிக்காக் 2 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி அதில் 10 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.
இவரது சர்வதேச ஸ்கோரானது சற்று ஏமாற்றமளிக்கும் வகையில் இருந்தாலும், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இவர் பல சாதனைகளை குவித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார். அந்தவகையில் 260 முதல் தர போட்டிகளில் 421 இன்னிங்ஸ்களில் விளையாடியதுடன் அதில் 57 சதங்களையும், 91 அரைசதங்களையும் விளாசியது 19,410 ரன்களை குவித்துள்ளார். உள்ளூர் போட்டிகளில் இவரது சராசரியானது 50.67 ரன்களாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதன்பின் 2020ஆம் ஆண்டு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்த வாசிம் ஜாஃபர், தனது ஓய்வுக்கு பிறகு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும், வங்கதேச அண்டர் 19 அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும், உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் உத்ரகாண்ட் மற்றும் ஒடிசா அணிகளின் தலைமை பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.