Advertisement

ராகுலுக்கு பதில் சூர்யகுமாருக்கு வாய்ப்பு தரவேண்டும் - வாசிம் ஜாஃபர்!

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் எப்படியான இந்திய அணி அமைய வேண்டும்? எந்தெந்த வீரர்கள் அணியில் இடம் பெற வேண்டும்? என்று இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் அதிரடியான தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan January 09, 2023 • 21:55 PM
Wasim Jaffer Picks Suryakumar Yadav Over KL Rahul For 1st ODI vs Sri Lanka In Guwahati
Wasim Jaffer Picks Suryakumar Yadav Over KL Rahul For 1st ODI vs Sri Lanka In Guwahati (Image Source: Google)
Advertisement

ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி உள்நாட்டில் இலங்கை கிரிக்கெட் அணி உடன் மூன்று கோட்டிகள் கொண்ட டி20 தொடரை வென்று இருக்கிறது. இதற்கு அடுத்து ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி உடன் நாளை முதல் போட்டியில் மோதுகிறது.

இந்தப் போட்டிக்கு எப்படியான அணி அமைய வேண்டும்? எந்தெந்த வீரர்கள் அணியில் இடம் பெற வேண்டும்? என்று இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் அதிரடியான தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

Trending


இது குறித்து பேசிய அவர், “சூர்யகுமார் இருக்கும் மிகச் சிறப்பான பேட்டிங் ஃபார்மில் நான் கேஎல் ராகுலுக்கு பதிலாக அவரையே விரும்புகிறேன். பங்களாதேஷ் தொடரில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாததால் பேட்ஸ்மேன்கள் மீதுதான் கவனம் செலுத்தப்படும். பந்து வீச்சாளர்கள் மிக நன்றாகவே வங்கதேச தொடரில் செயல்பட்டார்கள் .

முன்பு இந்திய அணியின் பலமாக முதல் மூன்று இடங்களில் பேட்டிங் செய்த ஷிகர் தவான், ரோஹித் சர்மா, விராட் கோலி மூவரும் இருந்தனர். நாம் அவர்களிடமிருந்து வழக்கமாகச் சதங்களை பார்த்தோம். இப்போது அப்படி நீண்ட காலமாக நடக்கவில்லை. இந்தியா 300 மற்றும் 300 ரன்கள் மேல் அடிக்க விரும்பினால் முதல் மூன்று இடங்களில் விளையாடக்கூடிய பேட்ஸ்மேன்களிடம் இருந்து ரன்கள் வரவேண்டும்.

ஸ்ரேயாஸ் நல்ல பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார். தொடர்ந்து ரன்களை குவித்துள்ளார். ஆனாலும் ரோஹித் சர்மா இசான் கிஷான் மற்றும் விராட் கோலி மூவரும் ரன்கள் அடிக்க கொஞ்சம் பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். அவரையே அதிகம் நம்பிக் கொண்டு இருக்கக் கூடாது” என்று தெரிவித்திருக்கிறார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement