கேப்டனுடம் வார்த்தை மோதலில் ஈடுபட்ட ஆல்ஸாரி ஜோசப்; வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் அல்ஸாரி ஜோசப் அணியின் கேப்டன் ஷாய் ஹோப்புடன் வார்த்தை மோதலில் ஈடுபட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று பார்படாஸில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியானது பில் சால்ட் மற்றும் டேன் மௌஸ்லி ஆகியோரது அரைசதத்தின் மூலம், ஜோஃப்ரா ஆர்ச்சரின் அதிரடியான் ஃபினிஷிங்கின் மூலமும் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 263 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக பில் சால்ட் 74 ரன்களையும், டேன் மௌஸ்லி 57 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோஃப்ரா ஆர்ச்சர் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 38 ரன்களையும் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் மேத்யூ போடு 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப், ரூதர்போர்ட்தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் எவின் லூயிஸ் 19 ரன்னில் விகெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
Trending
அதன்பின் ஜோடி சேர்ந்த பிராண்டன் கிங் - கேசி கார்டி இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர். இதில் பிராண்டன் கிங் தனது மூன்றாவது சதத்தையும், கேசி கார்டி தனது முதல் சதத்தையும் விளாசியதுடன் 2ஆவது விக்கெட்டிற்கு 200 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார். அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிராண்டன் கிங் 102 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேசி கார்டி 15 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 128 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 43 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 267 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்நிலையில் இப்போட்டியின் போது வெஸ்ட் இண்டீஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் அல்ஸாரி ஜோசப் மற்றும் கேப்டன் ஷாய் ஹோப் ஆகியோர் வார்த்தை மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்படி இன்னிங்ஸின் 4ஆவது ஓவரை அல்ஸாரி ஜோசப் வீச அதனை இங்கிலாந்து வீரர் ஜோர்டன் காக்ஸ் எதிர்கொண்டார். அப்போது அந்த ஓவரில் அல்ஸாரி ஜோசப் ஃபீல்டர்களை மாற்றும் படி கேப்டன் ஷாய் ஹோப்புடன் பரிந்துரைத்தார்.
10 FIELDERS ON THE FIELD.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 7, 2024
- Alzarri Joseph was angry with the field settings, bowls an over, takes a wicket and leaves the field for an over due to which WI were with just 10 fielders. pic.twitter.com/ZN44XxG8Uk
Also Read: Funding To Save Test Cricket
ஆனால் அதற்னை ஏற்க மறுத்த ஷாய் ஹோப் அதே ஃபீல்டை வைத்தே பந்துவீசும் படி கூறினார். இதனால் அதிருப்தியடைந்த அல்ஸாரி ஜோசப் வசை பாடிய படியே, அடுத்த பந்தை வீசியதுடன் அதில் ஜோர்டன் காக்ஸின் விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினார். இருப்பினும் அந்த ஓவர் முடிந்த கையோடு அல்ஸாரி ஜோசப் யாரிடமும் ஏதும் சொல்லாமல் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனால் விண்டீஸ் அணி அடுத்த் ஓவரில் 10 வீரர்களை மட்டுமே கொண்டு ஃபீல்டிங் செய்தது. இந்த சம்பவமானது தாற்சமயம் பெரும் விவாதப்பொருளாக வெடீத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now