முகமது ஹாரிஸை க்ளீன் போல்டாக்கிய அன்ஷுல் கம்போஜ் - வைரலாகும் காணொளி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய வீரர் அன்ஷுல் கம்போஜ் பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ஹாரிஸை க்ளீன் போல்டாக்கி பெவிலியனுக்கு வழியனுப்பிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் நடத்தப்படும் வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை டி20 தொடரின் நடப்பு சீசன் ஓமனில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற 4ஆவது லீக் போட்டியில் இந்தியா ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா ஏ அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. இந்திய ஏ அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் திலக் வர்மா 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 44 ரன்களையும், பிரப்சிம்ரன் சிங் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 36 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் சுபியான் முகீம் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Trending
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் ஏ அணியானது இறுதிவரை போராடிய நிலையிலும் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அராஃபத் மின்ஹாஸ் 41 ரன்களையும், யாசிர் கான் 33 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் அன்ஷுப் கம்போஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் இந்திய ஏ அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அன்ஷுல் காம்போஜ் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியின் முதல் ஓவரிலேயே அன்ஷுல் கம்போஜ் பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ஹாரிஸை க்ளீன் போல்டாக்கி பெவிலியனுக்கு வழியனுப்பினார். அதன்படி இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் முகமது ஹாரிஸ் பேட்டிங் செய்ய களமிறங்கினார்.
இந்திய அணி தரப்பில் அன்ஷுல் கம்போஜ் முதல் ஓவரை வீச, அந்த ஓவரின் முதல் பந்திலேயே முகமது ஹாரிஸ் சிக்ஸரை பறக்கவிட்டு தனது ரன் கணக்கை தொடங்கினார். அதன்பின் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அடுத்த பந்தை அன்ஷுல் கம்போஜ் வீச, அதனையும் பவுண்டரி அடிக்கும் முயற்சியில் முகமது ஹாரிஸ் விளையாட நினைத்து பந்தை தவறவிட்டார். ஆனால் அந்த பந்தானது அவரது லெக் ஸ்டம்பை காற்றில் பறக்கவைத்தது.
Also Read: Funding To Save Test Cricket
இதன் காரணமாக முகமது ஹாரிஸ் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இந்நிலையில் அன்ஷுல் கம்போஜ் முகமது ஹாரிஸின் விக்கெட்டை கைப்பற்றிய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now