பாகிஸ்தான் டாப் ஆர்டரை காலிசெய்த்த அர்ஷ்தீப் சிங்; வைரல் காணொளி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாமை, அர்ஸ்தீப் சிங் முதல் பந்திலேயே வெளியேற்றி அசத்தியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 16ஆவது போட்டியான இன்றைய போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இந்த போட்டிக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார்.அதே போல் ஹர்சல் பட்டேலுக்கு பதிலாக முகமது ஷமியும், யுஸ்வேந்திர சாஹலுக்கு பதிலாக ரவிச்சந்திர அஸ்வினும் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.
Trending
அதே போல் காயத்திலிருந்து மீண்டிருந்தாலும் ஃபகர் ஸமானிற்கு பதிலாக சான் மசூத் பாகிஸ்தான் அணியின் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளார். மேலும் ஆசிஃப் அலி, ஷாஹின் அஃப்ரிடி, நசீம் ஷா என வழக்கமான அனைத்து வீரர்களும் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.
இதன்பின் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு வழக்கம் போல் பாபர் அசாமும், முகமது ரிஸ்வானும் துவக்க வீரர்களாக களமிறங்கினர். போட்டியின் முதல் ஓவரை வீசிய புவனேஷ்வர் குமார் சிறப்பான பந்துவீச்சின் மூலம் முதல் ஓவரில் வெறும் ஒரு ரன் மட்டுமே விட்டுகொடுத்தார்.
இதன்பின் இரண்டாவது ஓவரை வீச வந்த அர்ஷ்தீப் சிங், தான் வீசிய முதல் பந்திலேயே பாகிஸ்தான் அணியின் மிக முக்கிய விக்கெட்டான கேப்டன் பாபர் அசாமை எல்.பி.டபிள்யூ முறையில் வெளியேற்றி அசத்தினார்.
அதன்பின் தனது இரண்டாவது ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங், ஓவரின் கடைசிப் பந்தில் முகமது ரிஸ்வானின் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் பாகிஸ்தான் அணி தங்களது முக்கிய வீரர்களான பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான் ஆகியோரது விக்கெட்டுகளை 15 ரன்களுக்குள்ளாகவே இழந்து தடுமாறிவருகிறது.
இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு பேசியிருந்த முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா, பாபர் அசாமின் விக்கெட்டை அர்ஷ்தீப் சிங் அசால்டாக கைப்பற்றுவார் என கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now