
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடகக் வீரர்கள் கூப்பர் கன்னோலி ரன்கள் ஏதுமின்றியும், அதிரடியாக தொடங்கிய டிராவிஸ் ஹெட் 39 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய மார்னஸ் லபுஷாக்னே 29 ரன்னிலும், ஜோஷ் இங்கிலிஸ் 11 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அரைசதம் கடந்து அசத்திய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தும் 73 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய வீரர்களில் அலெக்ஸ் கேரி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்ததுடன் 61 ரன்களைச் சேர்த்து ரன் அவுட்டானார். பின்னர் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவற இறுதியில் ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்கள் முடிவில் 264 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், வருண் சக்கரவர்த்தி, ரவீந்திர ஜடேஜா தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.