
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பந்துவீச அழைத்தது. இப்போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் இமாம் உல் ஹக் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு இமாம் உல் ஹக் மற்றும் பாபர் ஆசா ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
இதில் இருவரும் தொடக்கம் முதலே நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் சிறப்பான தொடக்கத்தைப் பெற்றிருந்த நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் 5 பவுண்டரிகளுடன் 23 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் த்னது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து மாற்றொரு தொடக்க வீரரான இமாம் உல் ஹக்கும் 10 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.