
Ben Duckett Catch: இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வீரர் பென் டக்கெட் அபாரமான கேட்சைப் பிடித்ததுடன் ஷர்தூல் தாக்கூர் அரைசதம் அடிக்கும் வாய்ப்பையும் தடுத்து நிறுத்தினார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்களைச் சேர்த்திருந்தது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை ரவீந்திர ஜடேஜா 19 ரன்களுடனும், ஷர்தூல் தாக்கூர் 19 ரன்களுடனும் தொடர்ந்தனர்.
இதில் ஜடேஜா 20 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதிரடியாக விளையாடிய ஷர்துல் தாக்கூரும் 41 ரன்களில் ஆட்டமிழந்தர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் மற்றும் அன்ஷுல் கம்போஜ் ஆகியோரும் சோபிக்க தவறிய நிலையில், அரைசதம் கடந்த ரிஷப் பந்தும் 54 ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களைச் சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.