இணையத்தில் வைரலாகும் சார்லோட் - தீப்தி சர்மா ரன் அவுட் காணொளி!
தீப்தி சர்மா, சார்லோட் டீனை ரன் அவுட் செய்யும் காணொளியானது இணையத்தில் படுவேகமாக வைரலாகி ரசிகர்களால் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. இதையடுத்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி ஏற்கனவே கைப்பற்றி இருந்தது.
இந்நிலையில் இரு அணிகள் இடையேயான 3ஆவது மற்றும் கடைசி போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 45.4 ஓவர்களில் 169 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. அதிகபட்சமாக 68 ரன்கள் குவித்த தீப்தி ஷர்மா கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். மந்தனா 50 ரன்னும், பூஜா 22 ரன்னும் எடுத்தனர்.
Trending
இதையடுத்து 170 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 43.4 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சார்லோட் டீன் 47 ரன்னும், எம்மா லாம்ப் 21 ரன்னும் எடுத்தனர். எமி ஜோன்ஸ் 28 ரன் அடித்தார். இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக ரேணுகா சிங் 4 விக்கெட்டுகளும், ஜூலன் கோஸ்வாமி மற்றும் கெய்க்வாட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், தீப்தி சர்மா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம் இந்திய மகளிர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் ஒருநாள் தொடரை 3-0 என கைப்பற்றியது. இந்நிலையில் இப்போட்டியின் இறுதியில் அதிரடியாக விளையாடிவந்த இங்கிலாந்து வீராங்கனை சார்லோட் டீனை, இந்திய வீராங்கனை தீப்தி சர்மா ரன் அவுட்டாக்கி (மான்கட்) வெளியேற்றினார். இது சர்வதேச கிரிக்கெட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
take a bow, Deepti Sharma pic.twitter.com/HAocX8cGf7
— Bleh (@rishabh2209420) September 24, 2022
மேலும் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டிருந்த புதிய விதிமுறைப் படி மான்கட் இனி ரன் அவுட்டாக அறிவிக்கப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி தீப்தி சர்மா செய்ததில் எந்த தவறும் இல்லை என சிலரும், மான்கட் விதியாக இருந்தாலும் அது ஆட்டத்தில் ஸ்பிரீட்டிற்கு எதிரானது என சிலரும் சமூக வலைதளங்களில் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் தீப்தி சர்மா, சார்லோட் டீனை ரன் அவுட் செய்யும் காணொளியானது இணையத்தில் படுவேகமாக வைரலாகி ரசிகர்களால் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now