அடுத்தடுத்து 4 சிக்ஸர்கள்; புதிய சாதனை படைத்த பிரீவிஸ் - காணொளி
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 4 சிக்ஸர்களை விளாசிய வீரர் எனும் சாதனையை தென்னாப்பிரிக்காவின் டெவால்ட் பிரீவிஸ் படைத்துள்ளார்.

Australia vs South Africa 3rd T20I: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் டெவால்ட் பிரீவிஸ் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்ததுடன் சில சாதனைகளையும் படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று கெய்ர்ன்ஸில் நடைபெற்றது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணியில் டெவால்ட் பிரீவிஸ் அரைசதம் கடந்ததுடன் 26 பந்துகளில் ஒரு பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 53 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களைச் சேர்த்தது.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் மிட்செல் மார்ஷ் 54 ரன்களை எடுத்து ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்கள் சோபிக்க தவறினர். இருப்பினும் மறுபக்கம் அபாரமாக விளையாடி வந்த கிளென் மேக்ஸ்வெல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 62 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 19.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 2 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி ஆஸ்திரேலிய அணி அசத்தியுள்ளது. இப்போட்டியில் அரைசதம் கடந்து அசத்திய கிளென் மேக்ஸ்வெல் ஆட்டநாயகன் விருதையும், டிம் டேவிட் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.
இந்நிலையில் இந்த போட்டியில் டெவால்ட் பிரீவிஸ் அரைசதம் கடந்து அசத்தியதுடன், சில சாதனைகளையும் படைத்துள்ளார். அதன்படி, இப்போட்டியில் அவர் 22 பந்துகளில் அரைசதம் கடந்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக அரைசதம் கடந்த வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன் இந்த சாதனையை பிரீவிஸ் 25 பந்துகளில் அடித்து முதலிடத்தில் இருந்த நிலையில், அவரது சாதனையை அவரே முறியடித்துள்ளார்.
THREE NO-LOOK SIXES IN A ROW FROM DEWALD BREVISBKTtires PlayoftheDay | AUSvSA pic.twitter.com/2w1BpmR8T
— cricket.com.au (cricketcomau) August 16, 2025
Also Read: LIVE Cricket Score
இதுதவிர்த்து இப்போட்டியில் ஆரோன் ஹார்டி வீசிய ஓவரில் டெவால்ட் பிரீவிஸ் தொடர்ச்சியாக 4 சிக்ஸர்களை விளாசினார். இதன்மூலம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சர்வதேச டி20 போட்டியில் தொடர்ச்சியாக நான்கு பந்துகளில் நான்கு சிக்ஸர்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பிரீவிஸ் பெற்றுள்ளார். இந்நிலையில் பிரீவிஸ் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now