
ஐபிஎல் தொடரில் நேற்று சென்னை எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றதுடன் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது.
இப்போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வியைத் தழுவி இருந்தாலும், அறிமுக வீரராக விளையாடிய தென் ஆப்பிரிக்காவின் டெவால்ட் பிரீவிஸ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அவர் தனது அதிரடியன பேட்டிங் பாணியில் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசி சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டர் பிரச்சனைக்கும் ஒரு தீர்வை கொடுத்துள்ளார். அதில் அவர் இப்போட்டியில் ஒரே ஓவரில் மூன்று சிக்ஸர்களை விளாசியும் மிரட்டினார்.
அந்தவகையில் இன்னிங்ஸின் 12ஆவது ஓவரை சன்ரைசர்ஸ் தரப்பில் கமிந்து மெண்டிஸ் வீசிய நிலையில் ஓவரின் முதல் பந்திலேயே இமாலய சிக்ஸரைப் பறக்கவிட்டதுடன், அந்த 4ஆவது பந்தில் டீப் மிட் விக்கெட்டிலும், ஓவரின் கடைசி பந்தில் லாங் ஆஃப் திசையிலும் என சிக்ஸரை பறக்கவிட்டு அசத்தினார். இதன்மூலம் அந்த ஒரே ஓவரில் மட்டும் சிஎஸ்கே அணியானது 20 ரன்களைக் குவித்ததன் காரணமாக அணியின் ஸ்கோரையும் உயர்ந்தது.