அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தை மாற்றிய ஈஷான் மலிங்கா - காணொளி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஈஷான் மலிங்கா ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தின் போக்கை மாற்றிய காணொளி வைரலாகி வருகிறது.

லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் ஜித்தேஷ் சர்மா தலைமையிலான ஆர்சிபி அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களுடைய 5ஆவது வெற்றியைப் பதிவுசெய்து 11 புள்ளிகளுடன் 8ஆம் இடத்திலும், மறுபக்கம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்த சீசனில் 4ஆவது தோல்வியைத் தழுவிய நிலையில் மூன்றாம் இடத்தில் தொடர்கிறது. இந்நிலையில் இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய இஷான் மலிங்கா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார்.
ஒருகட்டத்தில் பெங்களூரு அணி இப்போட்டியை எளியாக வெல்லும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், இன்னிங்ஸின் 16ஆவது ஓவரை வீசிய இஷான் மலிங்கா ஆட்டத்தை போக்கை தலைகீழாக மாற்றினார். ஏனெனில் அந்த ஓவரின் 4ஆவது பந்தில் ஆர்சிபி அணி வீரர் ரஜத் படிதார் அடித்த பந்தை அடித்து விட்டு சிங்கிள் எடுக்க முயற்சித்த நிலையில் அந்த பந்தை பிடித்த மலிங்கா அவரை ரன் அவுட்டாகி அசத்தினார்.
இதனால் 18 ரன்களை எடுத்திருந்த ராஜத் படிதார் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கிய அதிரடி வீரர் ரொமாரியோ ஷெஃபர்டும் எதிர்கொண்ட முதல் பந்திலே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதன்மூலம் ஆர்சிபி அணியின் ரன் வேகம் குறைந்ததுடன் அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்நிலையில் ஈஷான் மலிங்கா ஓவரில் ஆர்சிபி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த காணோளியானது வைரலாகி வருகிறது.
Brilliant Bowling Excellent Fielding
Eshan Malinga turns things around for #SRH with a double-wicket over
Updates https://t.co/sJ6dOP9ung#TATAIPL | #RCBvSRH | @SunRisers pic.twitter.com/ICjk0zQ3PJ— IndianPremierLeague (@IPL) May 23, 2025இப்போட்டி குறித்து பேசினால் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த இஷான் கிஷான் 7 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 94 ரன்களையும், அபிஷேக் சர்மா 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 34 ரன்களையும் சேர்த்த நிலையில், மற்ற வீரர்கள் சிறு சிறு பங்களிப்பினை வழங்கினர். இதன்மூலம் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்களைச் சேர்த்தது.
Also Read: LIVE Cricket Score
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணியில் தொடக்க வீரர்கள் பில் சால்ட் 4 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 62 ரன்களையும், விராட் கோலி 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 43 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் ராயால் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
Win Big, Make Your Cricket Tales Now