Advertisement

விராட் கோலியை இமிடேட் செய்த கிளென் மேக்ஸ்வெல்; வைரலாகும் காணொளி!

ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பேட்டிங் செய்வதை போன்றே அவருக்கு பின்னால் நின்று இமிடேட் செய்த கிளென் மேக்ஸ்வெல்லின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
விராட் கோலியை இமிடேட் செய்த கிளென் மேக்ஸ்வெல்!
விராட் கோலியை இமிடேட் செய்த கிளென் மேக்ஸ்வெல்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 20, 2024 • 10:24 PM

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளை மறுநாள் சென்னை சேப்பாக்கத்திலுள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இத்தொடரின் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இரு அணியிலும் அதிரடி வீரர்கள் நிறைந்திருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
March 20, 2024 • 10:24 PM

இதையடுத்து இப்போட்டியில் பங்கேற்பதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் இன்றைய தினம் சென்னை வந்தடைந்தனர். அதன்படி சென்னையில் முகாமிட்டுள்ள ஆர்சிபி அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்ரனர். இதில் நட்சத்திர வீரர் விராட் கோலி பேட்டிங் பயிற்சி செய்துகொண்டிருக்கையில், அவருக்கு பின்புறமாக நின்று கிளென் மேக்வெல்லும் விராட் கோலியைப் போன்று இமிடேட் செய்து காட்டினார். 

Trending

 

இந்நிலையில் இக்காணொளி ஐபிஎல் அதிராகப்பூர்வ எக்ஸ் தள பதிவியில் வெளியிடப்பட்டு, வைரலாகி வருகிறது. முன்னதாக கிளென் மேக்ஸ்வெல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய தருணத்தில் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பேட்டிங் செய்வதை இமிடேட் செய்திருந்தார். இந்நிலையில் தற்போது அந்த புகைப்படத்தையும், தற்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் இணைத்து ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

 

ஆர்சிபி அணி: ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல், விராட் கோலி, ராஜத் பட்டிதார், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக், சுயாஷ் பிரபுதேசாய், வில் ஜேக்ஸ், மஹிபால் லோம்ரோர், கர்ண் ஷர்மா, மனோஜ் பந்தேஜ், மயங்க் டாகர், விஜய்குமார் வைஷாக், ஆகாஷ் தீப், முகமது சிராஜ், ரீஸ் டாப்லி, ஹிமான்ஷு சர்மா, ராஜன் குமார், கேமரூன் கிரீன், அல்ஜாரி ஜோசப், யாஷ் தயாள், டாம் கரன், லோக்கி ஃபெர்குசன், ஸ்வப்னில் சிங், சவுரவ் சவுகான்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement