
மேஜர் லீக் கிரிக்கெட் 2025: சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நடப்பு எம்எல்சி தொடரில் தங்களுடைய இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
எம்எல்சி தொடரில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த யூனிகார்ன்ஸ் அணி ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் (88 ரன்கள்) மற்றும் ஃபின் ஆலன் (52 ரன்கள்) ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 219 ரன்களைக் குவித்து.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நைட் ரைடர்ஸ் அணியில் உன்முக்த் சந்த் (53 ரன்கள்) மற்றும் மேத்யூ ட்ரோம்ப் (41 ரன்களை) ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்க தவறியதன் காரண்மாக அந்த அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியதுடன் தோல்வியையும் தழுவியது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் ஆட்டநாயகன் விருதை வென்றார்.