Advertisement

தீவிர பயிற்சியில் இறங்கிய இந்திய வீரர்க; வைரலாகும் பிசிசிஐ காணொளி!

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
தீவிர பயிற்சியில் இறங்கிய இந்திய வீரர்க; வைரலாகும் பிசிசிஐ காணொளி!
தீவிர பயிற்சியில் இறங்கிய இந்திய வீரர்க; வைரலாகும் பிசிசிஐ காணொளி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 09, 2025 • 09:23 PM

இந்திய அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர். 

Bharathi Kannan
By Bharathi Kannan
June 09, 2025 • 09:23 PM

ரோஹித் சா்மா, விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் இல்லாத நிலையில், இளம் வீரா் ஷுப்மன் கில் தலைமையில் இந்திய அணி தற்போது இங்கிலாந்து சென்றுள்ளது. அத்துடன் அறிமுக வீரர்கள் சாய் சுதர்ஷன், அர்ஷ்தீப் சிங், அபிமன்யூ ஈஸ்வரன் மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ள கருண் நாயர் மற்றும் ஷர்தூல் தாக்கூர் உள்ளிட்டோருடன் குல்தீப் யதவ், முகமது சிராஜ் உள்ளிட்டோருக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இதனால் இந்த தொடரில் இந்திய அணியின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்த டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்கள் பயிற்சியை தொடங்கியுள்ளனர். இதுகுறித்த காணொளியை பிசிசிஐ சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அதேசமயம் ஒரு சில வீரர்கள் இந்திய ஏ அணிக்காக விளையாடி வருவதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20 ஆம் தேதி லீட்ஸ் மைதானத்திலும், 2ஆவது போட்டி ஜூலை 2ஆம் தேதி பர்மிங்ஹாமிலும், 3ஆவது போட்டி ஜூலை 10ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்திலும், 4ஆவது போட்டி மான்செஸ்டரிலும், 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜூலை 31ஆம் தேதி ஓவல் மைதானத்திலும் நடைபெறவுள்ளது.

இங்கிலந்து அணி (முதல் டெஸ்ட்): பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஷோயப் பஷீர், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், சாம் குக், ஸாக் கிரௌலி, பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஓல்லி போப், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டோங், கிறிஸ் வோக்ஸ்

Also Read: LIVE Cricket Score

இந்திய டெஸ்ட் அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணைக்கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement