
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இப்போட்டியில் டேல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் பவுண்டரில் எல்லையில் ஒரு அபாரமான கேட்ச்சை பிடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அதன்படி இன்னிங்ஸின் 16ஆவது ஓவரை குல்தீப் யாதவ் வீசிய நிலையில், அந்த ஓவரின் ஐந்தாவது பந்தை எதிர்கொண்ட அனிகேத் வர்மா சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் மிட் விக்கெட் திசையில் அசத்தலான ஒரு ஷாட்டை விளையாடினார்.
மேலும் அவர் அந்த ஷாட்டை சிறப்பாக விளையாடியதன் காரணமாக பந்து சிக்ஸருக்கு சென்றது என அனைவரும் நினைத்தனர். ஆனால் அத்திசையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் யாரும் எதிர்பாராத வகையில் பவுண்டரில் எல்லை அருகே தாவி பந்தை பிடித்து அசத்தினார். இதனால் அதிரடியாக விளையாடி வந்த அனிகேத் சர்மா 74 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து ஏமாற்றத்துடன் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.