
Joe Root Clean Bowled by Akash Deep: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 608 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடி வரும் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டான நிலையில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 407 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன்மூலம் 180 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி ஷுப்மன் கில்லின் அபாரமான சதத்தின் மூலம் 427 ரன்களை குவித்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்து, இங்கிலாந்து அணிக்கு 608 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது. அதன்பின் கடின இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 72 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது.