அடுத்தடுத்து பறந்த ஸ்டம்புகள்; ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து வீரர்கள் - வைரல் காணொலி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் சாகிப் மக்மூத் இருவரும் இணைந்து ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளனர்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய அணியானது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று சௌத்தாம்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி, முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியில் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தினார். அதேசமயம் மேட்யூ ஷார்ட் மற்றும் ஜோஷ் இங்கிலிஸும் தங்ள் பங்களிப்பை கொத்த நிலையில் மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர்.
இதனால் ஆஸ்திரேலிய அணியானது 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 23 பந்தில் 59 ரன் எடுத்தார்.மேலும் மேத்யூ ஷார்ட் 41 ரன்களையும், ஜோஷ் இங்கிலிஸ் 37 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து சார்பில் லிவிங்ஸ்டோன் 3 விக்கெட்டும், சாகிப் மஹ்மூத், ஜோஃப்ரா ஆர்ச்சர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர்கள் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
Trending
அந்த அணியில் லியாம் லிவிங்ஸ்டோன் 37 ரன்களையும், கேப்டன் பிலிப் சால்ட் 20 ரன்களையும் எடுத்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இதனால் இங்கிலாந்து அணி 19. 2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் சீன் அபோட் 3 விக்கெட்டுகளையும், ஆடம் ஜாம்பா, ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணியானது 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலையும் பெற்றுள்ளது.
JOFRA MAHMOOD
ENGLAND TAKES A TEAM
HAT-TRICK...!!!! #Cricket #IPL2025 #ENGvsAUS#Archerpic.twitter.com/fHNKeTYkL0— Pratyush Halder (@pratyush_no7) September 11, 2024Also Read: Funding To Save Test Cricket
இந்நிலையில் இப்போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியைத் தழுவினாலும், அந்த அணி வேகப்பந்து வீச்சாளர்கள் ஜேஃப்ரா ஆர்ச்சர் மற்றும் சாகிப் மஹ்மூத் இருவரும் இணைந்து ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். அதன்படி 18ஆவது ஓவரை வீசிய அர்ச்சர்ந்த அந்த ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் சீன் அபோட் மற்றும் ஸேவியர் விக்கெட்டை கைப்பற்றி அசத்திய நிலையில், 19ஆவது ஓவரை வீசிய சாகிப் மக்மூத் அந்த ஓவரின் முதல் பந்தில் கேமரூன் க்ரீனை க்ளீன் போல்டாக்கி வழியனுப்பினார். இந்நிலையில் ஆர்ச்சர், மக்மூத் இருவரும் இணைந்து ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now