
Jofra Archer Video: லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் இந்திய அணியின் ரிஷப் பந்த் விக்கெட்டை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 387 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டான நிலையில், பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியும் 387 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானதுடன் ஸ்கோரையும் சமன்செய்தது.
இதனால் முன்னிலை ஏதுமின்றி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 192 ரன்களிலேயே ஆல் அவுட்டானதுடன் 193 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்திய அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்களைச் சேர்த்திருந்தது. இதனையடுத்து இன்று நடைபெற்று வரும் கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தோல்வியைத் தவிர்க்க போராடி வருகிறது.