
பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி முல்தானில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் அதிகபட்சமாக குடகேஷ் மோட்டி 55 ரன்களையும், வாரிகன் 36 ரன்களையும் சேர்த்தனர். பாகிஸ்தான் சார்பில் நோமன் அலி 6 விக்கெட்டும், சஜித் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணியானது வெஸ்ட் இண்டீஸின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தார். இதனால் அந்த அணி முதல் இன்னிங்சில் 154 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக முகாது ரிஸ்வான் 49 ரன்னும், சௌத் ஷகீல் 32 ரன்னும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜொமல் வாரிகன் 4 விக்கெட்டும், குடகேஷ் மோட்டி 3 விக்கெட்டும், கீமர் ரோச் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 9 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேப்டன் பிராத்வைத் அரைசதம் கடந்ததுடன் 52 ரன்களை சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதன் காரணமாக, இரண்டாவது இன்னிங்ஸில் 244 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் சார்பில் சஜித் கான், நோமன் அலி தலா 4 விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் பாகிஸ்தான் அணிக்கும் 254 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் அணி இலக்காக நிர்ணயித்தது.