ஆஷஸ் 2023: வார்னர், கவாஜாவை க்ளீன் போல்டாக்கிய ஜோஷ் டங்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டங் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று லண்டனிலுள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தார். இப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு அறிமுக வீரராக ஜோஷ் டங் சேர்க்கப்பட்டார்.
Trending
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் - உஸ்மான் கவாஜா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் 17 ரன்களை மட்டுமே எடுத்திருந்த உஸ்மான் கவாஜா அறிமுக வீரர் ஜோஷ் டங் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
அதேசமயம் மறுபக்கம் ஆபார ஆட்டத்டை வெளிப்படுத்தி வந்த டேவிட் வார்னர் அரைசதம் கடந்தார். பின் 8 பவுண்டரி, ஒரு சிக்சர் என 66 ரன்களைச் சேர்த்திருந்த டேவிட் வார்னரை அறிமுக வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் டங் தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் க்ளீன் போல்டாக்கி வழியனுப்பி வைத்தார்.
Josh Tongue seems to be a serious swing bowler #CricketTwitter #Ashes #AUSvENG #Australia #Lordspic.twitter.com/qdTJ5qcWzt
— CRICKETNMORE (@cricketnmore) June 28, 2023
இதனால் ஆஸ்திரேலிய அணி 96 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்நிலையில் அறிமுக வீரர் ஜோஷ் டங் அடுத்தடுத்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களை க்ளீன் போல்டாக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருவதுடன், பாராட்டுகளையும் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now